அம்பேத்கர் சிலைக்கு மலர் துாவி மரியாதை
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி புல்லந்தையில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது உருவச்சிலைக்கு ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர்.மாவட்ட செயலாளர் உதயகுமார், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, கிளை செயலாளர் சண்முகம், பிரபாகரன், யோகேஸ்வரன், தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்தனர்.