உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.ம.மு.க.,  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

அ.ம.மு.க.,  நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.அவைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் அரூர் ராஜா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன் வரவேற்றார். புதிய மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., முருகனை அறிமுகம் செய்து மதுரை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் டேவிட் அண்ணாதுரை பேசினார். மாநில மகளிரணி செயலாளர் ஜெசிமா பானு மாவட்ட செயலாளர் சித்திகா, சிறுபான்மை பிரிவு மாவட்டத்தலைவர் ராஜா முகமது, நகர் செயலாளர் கருணாகரன், மாவட்ட பிரதிநிதி நந்தகுமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். மின் கட்டணத்தை உயர்த்திய தி.மு.க., அரசை கண்டித்து ஜூலை 22ல் போராட்டம் நடத்த கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்