உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம் 

அ.ம.மு.க., ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம்: மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் அ.ம.மு.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாவட்டச் செயலாளர்முருகன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர்கள் ராமச்சந்திரன், நாகராஜன் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்தீஸ்வரன்,ராமநாதபுரம் கிழக்கு நகர செயலாளர் இளஞ்செழியன், மேற்கு நகர செயலாளர் மாணிக்கவாசகம், மகளிரணி சித்திகா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். உணவு பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஜெ., ஆட்சியில் ரேஷன் கடைகளில் வழங்கிய பொருட்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை