அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத்தலைவர் உமாராணி தலைமை வகித்தார். செயலாளர் மல்லிகா, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சிவாஜி, சத்துணவு நலத்துறை சங்கம் மாவட்ட செயலாளர் முருகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேற்பார்வையாளர் பணிக்கு பதவி உயர்வு வழங்கி சமூகநலத்துறையில் காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும். மே மாதம் விடுமுறையை 1 மாதம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.ஏராளமான அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் பங்கேற்றனர்.