உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அம்மன் கோயில்களில் ஆனி அமாவாசை வழிபாடு

அம்மன் கோயில்களில் ஆனி அமாவாசை வழிபாடு

கீழக்கரை : கீழக்கரை அருகே குளபதம் ஊராட்சி வைகை கிராமத்தில் புத்தாளக் கண்மாய் கரையோரத்தில் உள்ள சிவகாளியம்மன் கோயிலில் ஆனி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. மூலவர்கள் சிவகாளியம்மன், சோனை கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாரானைகள் நடந்தது. பெண்கள் பொங்கலிட்டனர். கோயில் வளாகத்தில் நெய்விளக்கு ஏற்றியும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயில் மலர் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. உச்சிபுளி அருகே அரியமானில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை பூஜைகள் நடந்தது.* தேவிபட்டினம் நவபாஷாணத்தில், பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர். கடல் பகுதியில் புனித நீராடி பின்பு நவக்கிரகங்களை சுற்றி வந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு தோஷ நிவர்த்திகளுக்கும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.* ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மல்லம்மாள் காளியம்மன் கோயில், ரயில்வே பீடர் ரோடு மேம்பாலம் கீழே உள்ள வெட்டுடையாள் காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் அம்மனுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ