உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு ரூ.1.4 லட்சம் பறிமுதல்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நபார்டு மற்றும் ஊரக சாலை பிரிவு கோட்ட பொறியாளர் அலுவலகம் பரமக்குடியில் உள்ளது. இங்கு நேற்று லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாலை 6:30 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள நபர்களிடம் நடத்தும் விசாரணை அடிப்படையில் மேலும் தகவல் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ