| ADDED : ஏப் 18, 2024 05:24 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் 1374 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிய 5614 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஓட்டுச்சாவடி மைய அலுவலர்களுக்கான மூன்றாம் கட்டமாக கம்ப்யூட்டரில் சுழற்சிமுறையில் பணிஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். எஸ்.பி., சந்தீஷ், லோக்சபா தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ், தேர்தல் செலவின பார்வையாளர் ஹீராராம் சவுத்ரி முன்னிலை வகித்தனர். ஓட்டுப்பதிவு மைய அலுவலர்களுக்கான பணியிடம் குறித்த கம்ப்யூட்டரில் ரெண்டம் முறையில் தேர்வு செய்து அலுவலர்களுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டது.சட்டசபை தொகுதிகளான பரமக்குடி (தனி) 303, திருவாடானையில் 347, ராமநாதபுரத்தில் 338முதுகுளத்துாரில் 386 என 1374 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன.ஒவ்வொரு மையத்திலும் ஓட்டுப்பதிவு மையஅலுவலர், நிலை அலுவலர் - 1, நிலை அலுவலர் - 2, நிலை அலுவலர் - 3 ஆகியோர்தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 1200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள மையங்களில் மட்டும் நிலை அலுவலர்- 4 பணிபுரிவர். 1374 ஓட்டுச்சாவடி மையங்களில் பணிபுரிய 5614 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி., காந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.