மேலும் செய்திகள்
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை
25-Aug-2024
ரெகுநாதபுரம்: கீழக்கரை குறுவட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.கால்பந்து போட்டியில் 17 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான போட்டியில் முதலிடம், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கோ--கோ போட்டியில் முதலிடம், தடகளப் போட்டியில் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஈட்டி எறிதலில் முதலிடம், 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான 800 மீ., 1500 மீ., ஓட்டப்பந்தயத்தில் சந்தோஷிகா முதலிடம் பிடித்தார்.மேலும் 17 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான 400 மீ., தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தனர். செஸ் போட்டியில் 11 வயதிற்குட்பட்ட பிரிவில் அஸ்வந்த் முதலிடம், 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான செஸ் போட்டியில் ஜோவிட்டா இரண்டாமிடம் பிடித்தார்.விளையாட்டில் வென்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கோகிலா, முதல்வர் பிரீத்தா, கல்வி ஆலோசகர் ஜேக்கப் மற்றும் உடற்கல்வி இயக்குனர் அருள்மாரி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.
25-Aug-2024