உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செயற்கை நுண்ணறிவு செயலி வெளியீடு

செயற்கை நுண்ணறிவு செயலி வெளியீடு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில் இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் சார்பில் உடற்பயிற்சி மற்றும் உடற்கட்டமைப்பிற்கான செயற்கை நுண்ணறிவு செயலி வெளியிடப்பட்டது.இன்னோவேஷன் மற்றும் இன்குபேஷன் கவுன்சில் தலைவர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமை வகித்தார். நிறுவனத்தின் செயல் அதிகாரி கார்த்திகேயன் வரவேற்றார்.முதல்வர் பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினர் சென்னை அண்ணா இன்கு பேட்டரின் தலைவர் உமா மகேஸ்வரி, சென்னை அல்ஹரலக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜல்வத் ஆகியோர் பேசினார். முன்னதாக அல்ஹரலக்ஸ் நிறுவனம் செய்யது அம்மாள் இன்குபேஸன் கவுன்சிலும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.செயலியை உருவாக்கிய மாணவர்கள் நவ்பல், வெங்கட், வாஸிம் மற்றும் குழுவினரை சின்னதுரை அப்துல்லா பாராட்டினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் பாத்திமா சனாஸ், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். பேராசிரியர் கவுதம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி