உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முடிவடைய போகும் தடைக்காலம் படகு பராமரிப்பில் மீனவர்கள் தீவிரம்

முடிவடைய போகும் தடைக்காலம் படகு பராமரிப்பில் மீனவர்கள் தீவிரம்

ராமேஸ்வரம்:கோடை காலத்தில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை விசைப்படகில் மீன்பிடிக்க செல்ல தமிழக அரசு தடை விதித்தது. அதன்படி, தமிழகத்தில், 8,000 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தடை காலம் முடிய இன்னும், 15 நாட்கள் உள்ளதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் உள்ள 1,200 விசைப்படகுகளில் சேதமடைந்த மரப்பலகைகளை மீனவர்கள் சரி செய்தும், இன்ஜின்களை பழுது நீக்கியும் வருகின்றனர்.மேலும், 60 நாட்களுக்கு பின், மீன்பிடிக்க செல்வதால் விலை உயர்ந்த இறால் மீன்கள் அதிகம் சிக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி வலைகளை வடிவமைக்கும் பணிகளில் மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். படகு பராமரிப்பு, புதிய வலைகள், மீன்பிடி தளவாட பொருட்கள் வாங்க ஒரு படகிற்கு 1 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை செலவாகும். இதனால், 12 கோடி ரூபாய் முதல் 60 கோடி வரை மீனவர்களுக்கு செலவாகும். எதிர்பார்த்த மீன்வரத்து கிடைத்தால் மட்டுமே கடனை திருப்பி திருப்பி செலுத்த முடியும் என, மீனவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை