உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் தீயில்  கருகிய ஆட்டோ, டூவீலர் 

ராமநாதபுரத்தில் தீயில்  கருகிய ஆட்டோ, டூவீலர் 

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே நேரு நகர் 10-வது தெருவில் இரவில் ஆட்டோ, டூவீலர் தீயில் கருகியது.ராமநாதபுரம் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரேம்குமார் 44. இவர் ஆட்டோவை தனது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மண்டபம் கேம்ப் பகுதியை சேர்ந்த அய்யப்பன் தற்போது நேரு நகர் 10-வது தெருவில் வசித்து வருகிறார். இவரது டூவீலரை ஆட்டோ அருகே நிறுத்தியிருந்தார். அதிகாலை 2:30 மணிக்கு திடீரென ஆட்டோவும், டூவீலரும் தீயில் எரிந்து கருகின. இருவரது புகாரில் கேணிக்கரை போலீசார் ஆட்டோ, டூவீலர் தீயில் எரிந்தது குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை