உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் ராமர் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் அவதி

ராமேஸ்வரம் ராமர் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் அவதி

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பர்வதம் ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.ராமாயண வரலாற்றில் அனுமான், வானர சேனைகள் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்த போது ஸ்ரீராமர் கெந்தமாதன பர்வதம் (உயரமான மணல் திட்டு) எனும் இடத்தில் நின்றபடி கட்டுமானப் பணியை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.இதன் நினைவாக இங்கு ராமரின் பாதம் பொருத்திய கோயில் உள்ளதால் ராமர் பாதம் கோயில் என பெயரிடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.ஆனால் தற்போது ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் ராமர் பாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் 150 அடி உயரத்தில் படிக்கட்டுகளில் நடக்க வேண்டி உள்ளது.இதனால் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் சூட்டில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.படிக்கட்டு பாதையில் நிழல் தரும் பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி