மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
17 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
17 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
17 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
17 hour(s) ago
முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே மு.கடம்பன்குளம் கிராமத்தில் நல்லமழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி 5 ஆண்டுகளுக்கு பிறகு அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு, பொங்கல் விழா நடந்தது. முதுகுளத்துாரில் கடந்த ஒருமாதத்திற்கு முன்பு பிடிமண் வழங்கப்பட்டது. பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். தினமும் அய்யனாருக்கு பூஜைகள் நடந்தது. முதுகுளத்துார் அய்யனார் கோயிலில் மண்ணால் செய்த கருப்பண்ணசுவாமி, நாகர், பைரவர், குதிரைகள், தவழும் பிள்ளைகள் பக்தர்கள் 4 கி.மீ., ஊர்வலமாக மு.கடம்பன்குளம் கிராமத்திற்கு கொண்டு சென்றனர். கடந்தாண்டு விளைந்த தானியங்கள் வைத்து பூஜை மற்றும் கண் திறப்பு செய்யப்பட்டது. கிராமத்தின் முக்கிய வீதியில் உலா வந்து அய்யனார் கோயிலில் பூஜை செய்தனர். பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago