உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் புஷ்பகலா பூர்ணகலா சமேத சுரபி அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.செப்.15ல் அணுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தீப லெட்சுமி பூஜை, கும்ப அலங்காரம், முதற்கால, இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு மூன்றாம், நான்காம் கால யாக பூஜை தீபாராதனை, கடம் புறப்பாட்டுக்கு பின் கலசத்திற்கு கும்ப நீர் ஊற்றப்பட்டது.மூலவரான அய்யனார், கருப்பணசாமி உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பொது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அப்பனேந்தல் கிராம மக்கள் செய்தனர். முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ