உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் இன்று பால்குட விழா

ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் இன்று பால்குட விழா

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா இன்று காலை 10:30 மணிக்கும், பூச்சொரிதல் விழா மாலை 6:00 மணிக்கும் நடப்பதால் விழா ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. அரசாள வந்த அம்மன் கோயில் 48ம் ஆண்டு பால்குடம் மற்றும் பூச்சொரிதல் விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு ஜூலை 22ல் கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் வழிபாடு மற்றும் யாகசாலை பூஜைகளும் நடைபெற்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மனுக்கு 18 வகை அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்தன. தொடர்ச்சியாக விழாவின் ஐந்தாம் நாளில் மகளிர் மன்றத்தினரால் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று முன் தினம் இரவு கோயிலில் மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோயிலில் அம்மன் துதி பாடல்கள் பாடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.முக்கிய விழாவான பால்குடம் விழா இன்று காலை 10:30 மணிக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் இருந்து துவங்குகிறது.முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசாள வந்த அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு பூச்சொரிதல் விழாவும், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஹிந்து சமய மன்றத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை