பா.ஜ., பட்ஜெட் விளக்க கூட்டம்
சிக்கல்:சிக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே கடலாடி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் நடந்தது. பா.ஜ., கிழக்கு ஒன்றிய தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேசன், இளங்கண்ணன், சங்கர் உள்ளிட்டோர் பட்ஜெட் குறித்து விளக்கினர். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.