ராமேஸ்வரத்தில் படகு திருட்டு கடத்தல்காரர்கள் கைவரிசையா
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் மீன் பிடி பைபர் படகு திருடு போன நிலையில் இதனை கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி சென்றிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் ஓலைகுடாவை சேர்ந்தவர் மீனவர் பன்னீர் செல்வம் 58. இவருக்கு சொந்தமான பைபர் கிளாஸ் படகில் மீன்பிடித்து விட்டு கடற்கரையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி இருந்தார். நேற்று முன்தினம் காலை அப்படகை காணவில்லை என உறவினர்கள் கூறியதும் பன்னீர்செல்வம் கடற்கரைக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.ராமேஸ்வரம் நகர் போலீசில் புகார் அளித்தார். படகை கடத்தல்காரர்கள் கஞ்சா, புகையிலை, மளிகை பொருள் ஏற்றி கொண்டு இலங்கைக்கு கடத்தி சென்று இருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள இப்படகை கண்டுபிடித்து திருடி சென்ற கடத்தல்காரர்களை கைது செய்ய கோரிக்கை விடுத்தனர்.