உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் வேட்பாளர்கள் இறுதி கட்டத் தேர்தல் பிரசாரம்

ராமநாதபுரத்தில் வேட்பாளர்கள் இறுதி கட்டத் தேர்தல் பிரசாரம்

ராமநாதபுரம்: நாளை (ஏப்.,19ல்)லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் வேட்பாளர்கள் நேற்று மாலை 6:00மணி வரை ஓட்டுச் சேகரித்தனர்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் தேசிய ஜனநாகய கூட்டணியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சுயேச்சையாக பலாப்பழ சின்னத்திலும், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நவாஸ்கனி ஏணி சின்னத்திலும், அ.தி.மு.க.,வில் ஜெயபெருமாள் இரட்டை இலை சின்னத்திலும், நாம்தமிழர் கட்சியில் டாக்டர் சந்திராபிரபா மைக் சின்னத்திலும், இது தவிர ஒ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 பேர் உட்பட 25 பேர் போட்டியிடுகின்றனர். இறுதிக் கட்ட பிரசாரம்:கடைசிநாளான நேற்று முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ராமநாதபுரம் அரண்மனையில் இருந்து பிரசாரத்தை துவங்கி முக்கிய வீதிகளில் ஓட்டுச்சேகரித்தார். அதன்பிறகு மாலை 5:00 மணிக்கு ராமேஸ்வரத்தில் ஊர்வலமாக சென்று ஓட்டுசேகரித்து பிரசாரத்தை நிறைவு செய்தனர். பா.ஜ., மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், கூட்டணிகட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தி.மு.க., கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி அரண்மனைப்பகுதியில் தொடங்கி சிகில்ராஜவீதி, கேணிக்கரை, சின்னக்கடை, வழி விடுமுருகன் கோயில், வண்டிக்காரத்தெரு ஆகிய இடங்களில் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் ராஜகண்ணப்பன், காதர்பாட்ஷா எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாள் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் முன்பு ஊர்வலத்தை துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக முத்தாலம்மன் கோயில் முன்பு பிரசாரம் நிறைவு செய்தார். மாவட்ட செயலாளர் முனியசாமி, கூட்டணிகட்சியினர் பங்கேற்றனர்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்திராபிரபாமாவட்டத்தலைவர் நாகூர் தலைமையில்பேராவூரில் துவங்கி கேணிக்கரை, நகைக்கடை பஜார் வழியாக மீன் மார்க்கெட், அரண்மனை, பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக கட்சி அலுவலகத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை