உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

உக்ரைன், இஸ்ரேல் போரை நிறுத்த பேசும் பிரதமர் இலங்கை மீனவர் பிரச்னையை தீர்க்க முடியாதா 

ராமநாதபுரம் : உக்ரைன் போர், இஸ்ரேல் போரை நிறுத்துவதற்கு பேசும் பிரதமர் மோடி தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்க இலங்கையுடன் பேச முடியவில்லையே என ராமநாதபுரத்தில் நடந்த மீனவர் குறைதீர் கூட்டத்தில் வேதனை தெரிவித்தனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இந்திய கடற்படை கமாண்டர் நரேந்தர் சிங், மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விவாதம் வருமாறு: கலெக்டர்: தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரண நிதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் இந்திய- தமிழக அரசின் நடவடிக்கையால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். 2018 முதல் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகள், மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு நிவாரண நிதி கேட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் விடுபட்டவர்கள் இருந்தால் அதனை சரி செய்து மீண்டும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார். பேட்ரிக், மீனவர் சங்கம்: பாம்பன் பாலத்தில் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் அங்கு குடியிருந்த மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டும். ராயப்பன், நாட்டுப்படகு மீனவர்கள் சங்கம்: இலங்கை கடற்படையினர் முன்பெல்லாம் விசைப்படகு மீனவர்களை மட்டுமே கைது செய்வார்கள். தற்போது நாட்டுப்படகு மீனவர்களையும் கைது செய்து வருகின்றனர். இது வேதனைக்குரிய விஷயம். நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்களுக்கு தனித்தனியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். துாத்துக்குடி விசைப்படகு மீனர்கள் மீன் பிடிப்பின் போது நாட்டுப்படகு மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போஸ், விசைப்படகு மீனவர்கள் சங்கம்: இரட்டை மடி வலைகளை வைத்து மீன் பிடி தொழிலில் ஈடுபடுவது தொடர்கிறது. மண்டபம் பகுதியில் அதிகாரிகளின் துணையோடு நடக்கிறது. இதனை நிறுத்தாவிட்டால் இந்த நிலை ராமேஸ்வரம் பகுதிக்கும் பரவி விடும். தடை செய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன் பிடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும். தேவதாஸ், விசைப்படகு மீனவர் சங்கம்: உக்ரைன், இஸ்ரேல் போர் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். மோடி சொன்னால் உலக நாடுகள் அனைத்தும் கேட்டுக்கொள்ளும் என்கின்றனர். ஆனால் இலங்கையுடன் தமிழக மீனவர்கள் பிரச்னையை பேசி தீர்க்க முடியவில்லை. இலங்கை கடற்படை படகுகள் இந்திய எல்லை வரை கண்காணிக்கின்றனர். இந்திய கடற்படையினர் இந்திய எல்லை வரை ரோந்து வருவதில்லை. கருணாமூர்த்தி, கடல் தொழிலாளர் சங்கம்: மீனவர்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும். காலை நேரங்களில் இல்லாமல் மாலை 3:00 மணிக்கு பிறகு நடத்தப்பட வேண்டும். வெளி நாடுகளில் மீன் பிடி தொழிலுக்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். வெளி நாட்டு சிறையில் வாடும் மீனவர்களை மீட்க இந்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajasekar Jayaraman
நவ 10, 2024 06:50

போதை மருந்து கடத்தலுக்கு அனுமதி வாங்கி தரவேண்டுமோ?


வைகுண்டம்
நவ 09, 2024 20:11

கச்சத்தீவு தாரை வார்த்துக் கொடுத்து போது நீங்கள் எங்கே போய் விட்டீர்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
நவ 09, 2024 09:36

கஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவினால் அதை எதிர்த்து இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லும் போது கை தட்டி பெருமிதம் கொள்கிறோம்... .இதே எல்லையை தாண்டி நீங்கள் மீன் பிடிக்க சென்றால் இலங்கை ராணுவம் வேடிக்கை பார்க்கவேண்டும்....என்னையா உங்க நியாயம்.....!!!


Sck
நவ 10, 2024 06:21

அதுவும் இலங்கைக்கு கஞ்சா கடத்துவானுங்க, சிங்கள கப்பற்படை இவனுங்கள சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு கடக்கும். வேற எவர்கிட்டையாவது காதுல பூ சுத்துங்கடா.


கட்டத்தேவன்,,திருச்சுழி
நவ 09, 2024 08:47

ஐயா மீனவரே நீங்கள் உண்மையிலையே கடலுக்கு மீன் பிடிக்க போக வேண்டும் என நினைத்து நமது நாட்டு எல்லைக்குள் வலைகளை கொண்டு மீன்களை பிடித்தால் எந்தப் பிரச்சனையும் வராது. ஆனால் நீங்கள் அதிகமாக மீன் பிடிக்க வேண்டும் என பேராசையுடன் இந்திய கடல் எல்லையை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் போய் மீனை பிடிக்கும் போதுதான் பிரச்சனை வருகிறது அதுவும் தடை செய்யப் பட்ட சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறீர்கள். அதெப்படி மீனவர்களுக்கு நடுக்கடலுக்குள் எல்லை தெரியும் என்று உங்களுக்கு ஆதரவாக சிலர் இங்கே வரிந்து கட்டி வருவார்கள் காலங்காலமாக கடலில் மீன் பிடிக்கும் உங்களை போன்ற மீனவர்களுக்கு எது இரண்டு நாட்டு எல்லை என்பது மிக நன்றாக தெரியும் மேலும் இப்போது ஆழ் கடலுக்கு செல்லும் அனைத்து பெரிய படகுகளிலும் GPS கருவி பொருத்தப் பட்டுள்ளது எனவே எல்லை தெரியாது என்று சொல்லும் வாதம் எடுபடாது. அது மட்டுமா பீடி இலைக் கட்டுகள், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள், விலை உயர்ந்த உயிர்காக்கும் மருந்துகள் என பல கடத்தல் வேலைகளையும் செய்து கையும் களவுமாக இலங்கை கடற்படையால் கைது செய்யப் படுகிறீர்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இலங்கை கடற்படை கண்டும் காணாமல் உங்களை அப்படியே விட்டுவிட வேண்டும் என எப்படி எதிர் பார்க்கிறீர்கள்? உடனே பிரதமர் மோடியை குற்றம் சாட்டுகிறீர்கள் அவர் நீங்கள் நேர்மையாக இருந்து மீனை மட்டும் பிடிக்கப் போய மாட்டிக் கொண்டால் உடனே உங்களை காப்பாற்றுவார் ஆனால் பண்ணும் இந்த அடாவடிக்கு அவரை ஏன் மனசாட்சி இல்லாமல் குற்றம் சாட்டுகிறீராகள் சற்று சிந்தித்து பாருங்கள் 14 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு நடக்கும்போது இதே கடலில் எத்தனை தமிழக மீனவர்கள் அநியாயமாக குருவியை சுடுவதைப் போல் அப்போதைய இலங்கை அரசின் உத்தரவின் படி அந்த நாட்டு கடற்படையால் சுட்டுக் கொல்லப் பட்டார்கள் என்பதை நினைவு படுத்தி பாருங்கள் இப்போது மோடியின் ஆட்சியில் தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையால் பறிமுதல் செய்து மீனவர்களை கைது மட்டும் செய்து இலங்கை நீதிமன்றத்தில் முறையாக ஒப்படைக்கப் படுகிறார்கள். அப்படி கைது செய்யப் பட்டவர்களையும் அவர்களின் படகுகளையும் இந்திய பிரதமர் மோடி உத்தரவின் படி நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மீட்டுக் கொண்டு வருகின்றார். இது எல்லாம் உங்களுக்கு நன்றாக தெரிந்தாலும் நீங்கள் இந்த திராவிடமாடல் அரசுக்கு ஆதரவாக வழக்கம் போல் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் பற்றி குறை சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.


எஸ்ஸிகே
நவ 10, 2024 06:54

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.


அப்பாவி
நவ 09, 2024 07:24

அங்கே போய் ஏதாவது அதிருஷ்ட வசமா பிரச்சனை துர்ந்தால் நோபல் பரிசு குடுப்பாங்க. மீனவர் பிரச்சனையை தீர்த்தால் என்ன குடுப்பாங்க? மீனவர்கள் பிரச்சனை தீர இலங்கையை இந்தியாவிட சேர்த்திருக்கணும்.


எஸ்ஸிகே
நவ 10, 2024 06:54

நான்சென்ஸ். சீமானின் விசில் அடிச்சான் டுமிளனா நீ


புதிய வீடியோ