உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்

மணல் திருடிய 2 பேர் மீது  வழக்கு: லாரி பறிமுதல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் தரவைக்காட்டில் மணல் திருடியதாக 2 பேர் மீது வழக்கு பதிந்து லாரி, மண் அள்ளும் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.ராமநாதபுரம்- தேவிப்பட்டினம் ரோடு தரவைகாட்டில் மணல் கடத்தல் நடப்பதாக கேணிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ராஜகுமரன் தலைமையிலான போலீசார் அங்கு சென்ற போது லாரி, மண் அள்ளும் இயந்திரத்தில் 5 யூனிட் மணல் இருந்தது. இரு வாகனங்களை பறிமுதல் செய்து வன்னிவயல் சத்யா மகன் சங்கர் 39, ராமநாதபுரம் சித்திரைசாமி மகன் சரவணன் 33, ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ