உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் சாகுபடி செய்து ஊக்கத்தொகை பெறலாம்

கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் சாகுபடி செய்து ஊக்கத்தொகை பெறலாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர், பசுந்தீவனம் சாகுபடி செய்பவர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.பசுந்தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடைகளுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும் கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடப்பு 2024-25ம் ஆண்டில் பசுந்தீவன உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பழத் தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 50 ஏக்கர் இலக்கு பெறப்பட்டுள்ளது.கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் அரை ஏக்கர்அதிக பட்சம் 1 எக்டேரில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.ஏக்கருக்கு ரூ.3000 வீதம் அரசு ஊக்கத் தொகை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு 30 பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.விருப்பமுள்ளவர்கள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு எழுத்து பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி