உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை தாலுகாவில் 10 வி.ஏ.ஓ., க்கள் மாறுதல்

திருவாடானை தாலுகாவில் 10 வி.ஏ.ஓ., க்கள் மாறுதல்

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 10 வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.திருவாடானை தாலுகாவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக கிராமங்களில் பணிபுரியும் வி.ஏ.ஓ.,க்களுக்கு பொது மாறுதல் செய்வதற்கான கலந்தாய்வு கூட்டம் ஜூலை 9 ல் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. அதில் 10 வி.ஏ.ஓ.,க்களை மாறுதல் செய்து ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.நம்புதாளையில் பணியாற்றிய நம்புராஜேஸ் தொண்டிக்கும், கானட்டாங்குடியில் பணியாற்றிய ராமநாதன் கட்டவிளாகத்திற்கும், ஓரிக்கோட்டையில் பணியாற்றிய கார்த்திகா ஆதியூருக்கும், குளத்துாரில் பணியாற்றிய முத்துலட்சுமி கானட்டாங்குடிக்கும், மருங்கூரில் பணியாற்றிய ராஜேஸ் நம்புதாளைக்கும், மல்லனுாரில் பணியாற்றிய யாகப்பன் ஓரியூருக்கும், தேளூரில் பணியாற்றிய பிரகாஷ் ஓரிக்கோட்டைக்கும், கட்டவிளாகத்தில் பணியாற்றிய விநாயகம் மல்லனுாருக்கும், ஆதியூரில் பணியாற்றிய பாலு தேளூருக்கும், தொண்டியில் பணியாற்றிய ரேணுகா மருங்கூருக்கும் மாறுதல் செய்யபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி