| ADDED : மே 30, 2024 03:17 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சியில் கால்வாய்களை சீரமைத்து கழிவுநீரை சுத்திகரித்து நன்னீராக மாற்றி பூங்கா அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்ககலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார்.ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். சக்கரக்கோட்டை ஊராட்சியில் பட்டணம்காத்தான், மகாசக்தி நகரில் இருந்து வரக்கூடிய கழிவுநீர் சோத்துருணிக்கு வந்து சேருவதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து கழிவுநீர் வடிகால் வாய்க்காலை ஒருங்கிணைத்து சீரமைத்து சக்கரக்கோட்டை ஊராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து தினமும் வரக்கூடிய கழிவுநீரை சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றி பூங்கா அமைத்தல் மற்றும் மரங்கள் வளர்க்கும் திட்ட வரைவுகளை பி.டி.ஓ.,கள் செயல்படுத்த வேண்டும்.மேலும் மழைநீர் மற்றும் கழிவுநீர் வாய்க்கால்களை அவ்வப்போது சீரமைத்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த ஆய்வில் ராமநாதபுரம் பி.டி.ஓ.,க்கள் செந்தாமரை செல்வி, முருகானந்த வள்ளி, அலுவலர்கள் பங்கேற்றனர்.