வணிக வரித்துறை ரெய்டு
கீழக்கரை: கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், சாயல்குடி நகர் பகுதிகளில் பத்து நாட்களாக வணிகவரித்துறையினர் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொடர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மண்டல வணிகவரித் துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட கடைகளுக்கு சென்று ஜி.எஸ்.டி., மற்றும் இதர படிவங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக கணக்குகளை சமர்ப்பிக்காத கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் ரூ.5 லட்சம் முதல் 20 லட்சத்திற்கும் அதிகமாக அபராதம் விதிக்கின்றனர்.ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்கு, வருமான வரி, ஜி.எஸ்.டி., பிடித்தம், கடைகளின் ஆண்டு மொத்த கொள்முதல் உள்ளிட்ட விபரங்களை அடங்கிய பட்டியல்களை கைப்பற்றி தொடர் ஆய்வு செய்து வருகின்றனர்.