உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு

கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி முடிப்பு

கமுதி : கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி தினமலர் செய்தி எதிரொலியாக விரைந்து முடிக்கப்பட்டது.கமுதி அருகே பெருமாள் குடும்பன்பட்டியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கிராமத்தில் இருந்து புதுப்பட்டி வழியாக கமுதிக்கு செல்லும் ரோடு பணி 8 மாதத்திற்கு முன்பு துவக்கப்பட்டு தொடர்ந்து நடந்து வந்தது. இப்பணி கிடப்பில் போடப்பட்டதால் ரோட்டின் இருபுறங்களிலும் ஜல்லிகற்கள் மட்டும் குவித்து வைக்கப்பட்டதால் அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் பஸ் வசதி இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கிடப்பில் போடப்பட்ட ரோடு பணியை தற்போது முழுவதுமாக ரோடு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை