உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ்களில் மின்னணு பெயர் பலகையில் குழப்பம்

அரசு பஸ்களில் மின்னணு பெயர் பலகையில் குழப்பம்

திருவாடானை, -திருவாடானை, தொண்டி பஸ்ஸ்டாண்டிலிருந்து செல்லும் சில அரசு போக்குவரத்து பஸ்களின் மின்னணு பெயர் பலகையில் ஊர் பெயர் எழுத்து மறைந்தும், சில பஸ்களில் ஊர் தெரியாததால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர்.அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல ஆயிரம் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான அரசு பஸ்களில் மின்னணு பெயர்ப் பலகை உள்ளது. முன்புறம், பின்புறம் ஊர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் துாரத்திலிருந்து பார்த்தாலும் ஊர் பெயர் பளிச் என தெரியும்.கண் பார்வை குறைந்த முதியவர்களுக்கு இது வசதியாக இருக்கும். ஆனால் சில பஸ்களில் மின்னணு லைட் எரியாததால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். நேற்று தொண்டியிலிருந்து மதுரை சென்ற அரசு பஸ்சின் பின்புறம் ம என்ற எழுத்து மறைந்து துரை என்று மட்டும் தெரிந்தது.அதே போல் ராமநாதபுரம் பஸ்சின் பின்புறம் லைட் எரியாததால் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியவில்லை. முன்புறம் பார்த்த பிறகு தான் ராமநாதபுரம் செல்வது தெரிந்தது. பஸ்கள் ஒரே நிறத்தில் இருப்பதால் பெயர் பலகை மட்டும் இருந்தால் மட்டுமே அடையாளம் காண முடிகிறது.எனவே அனைத்து பஸ் டிப்போக்களிலும் பஸ்கள் புறப்பட்டு செல்லும் போது ஊர் பெயர் பலகை சரியாக உள்ளதா என அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி