உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டவுன் பஸ்சில் ஆண்களுக்கும் இலவச பயணம் வேண்டும் காங்., எம்.எல்.ஏ., கோரிக்கை

டவுன் பஸ்சில் ஆண்களுக்கும் இலவச பயணம் வேண்டும் காங்., எம்.எல்.ஏ., கோரிக்கை

திருவாடானை, : டவுன் பஸ்களில் ஆண்களும் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும் என்று திருவாடானை தொகுதி காங்., எம்.எல்.ஏ., கருமாணிக்கம் சட்டசபையில் வலியுறுத்தி பேசினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது:டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆண்களை ஏன் புறக்கணிக்கீறீர்கள். ஆண்களும் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும். தொண்டியில் பஸ் டெப்போ அமைக்க வேண்டும். பெரும்பாலான பஸ்கள் பழைய பஸ்களாக உள்ளதால் புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாடானையை மையமாக வைத்து வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும். ஆற்றங்கரை, அழகன்குளம், சித்தார்கோட்டை வழியாக மதுரைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும். எஸ்.பி.பட்டினத்தில் புதிய பஸ்ஸ்டாண்ட் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள் அதிகமாக வாழும் கிராமங்களில் சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு ரூ.7 லட்சம் செலவில் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்னக்கீரமங்கலத்தில் மூடியிருக்கும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை மீண்டும் திறக்க வேண்டும். திருவாடானை அரசு மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். ஆர்.எஸ்.மங்கலம், ஆனந்துார் சுகாதார நிலையங்களை தரம் உயர்த்த வேண்டும். திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். ராமநாதபுரம் பெரிய கண்மாய் மற்றும் பொதுப்பணித்துறை, யூனியன் கண்மாய்களை துார்வார வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை காலதாமதமில்லாமல் வழங்க வேண்டும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை