உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நகல் எரிப்பு போராட்டம்

நகல் எரிப்பு போராட்டம்

சாயல்குடி : மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் சாயல்குடியில் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். தாலுகா தலைவர் செல்வராஜ், தாலுகா பொருளாளர் அந்தோணி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் நகர் செயலாளர் அப்துல் காசிம், இந்திய கம்யூ., நகர் செயலாளர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.மத்திய அரசின் பட்ஜெட்டில் வேளாண் திட்டங்களுக்கு எதுவும் அறிவிக்கப்படாததை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ