உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் காற்றடித்தால் கரன்ட் கட்; பருவமழைக்கு முன்னதாக அகற்ற மக்கள் கோரிக்கை

ராமநாதபுரத்தில் மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளால் காற்றடித்தால் கரன்ட் கட்; பருவமழைக்கு முன்னதாக அகற்ற மக்கள் கோரிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் நகர், புறநகர் பகுதிகளில் மின்கம்பிகளை உரசும் அளவில் மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால் பலத்த காற்று, மழையின் போது கரன்ட் கட்டாவது வாடிக்கையாகியுள்ளது.விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. மின்வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றும், சில சமயங்களில் மழை பெய்கிறது. இதனால் இலைகள் உதிர்ந்த மரங்களின் கிளைகள் தற்போது நன்றாக வளர்ந்துள்ளன. ராமநாதபுரம் நகர், பட்டணம்காத்தான், சக்கரகோட்டை உள்ளிட்ட இடங்களில் மின்கம்பிகளை உரசும் வகையில் மரக்கிளைகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளன.இவ்விஷயத்தில் மின்வாரியம் பராமரிப்பு பணிகளை பெயரளவில் செய்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். பலத்த காற்று, மழையின் போது கரன்ட் கட் வாடிக்கையாகியுள்ளது. குறிப்பாக தினமலர் நகரில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மின்கம்பி ஓயர்களில் அடர்த்தியாக மரக்கிளைகள் வளர்ந்துள்ளன.இதனால் அடிக்கடி மின்தடையால் மக்கள் சிரமப்படுகின்றனர். அக்.,ல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. எனவே மின் வினியோகத்திற்கு இடையூறாக உள்ள மின் கம்பிகளை உரசும் வகையில் வளர்ந்துள்ள மரக்கிளைகள் அகற்ற மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை