மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
19 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
19 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
19 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
19 hour(s) ago
ராமநாதபுரம் : முதுகுளத்துார் தாலுகா ஏ.நெடுங்குளத்தில் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 40 ஆண்டான டிரான்ஸ்பார்மர்களால் மக்கள் விபத்து அச்சத்தில் உள்ளனர்.சாத்தானுார் ஊராட்சி ஏ.நெடுங்குளம் கிராம மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், நெடுங்குளத்தில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் மின் கம்பங்கள் சேதமடைந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.மின்வயர்கள் மாற்றப்படாமல் லேசான மழை, காற்று வீசினால் கூட அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதே போல் 20 ஆண்டுகளான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் காவிரி நீரை ஏற்றி குடிநீர் வழங்குகின்றனர். தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து நீர்க்கசிவு ஏற்படுகிறது.பாதுகாப்பற்ற நிலையில் தொட்டியை பல ஆண்டுகளாக சுத்தம் செய்யவில்லை. தொட்டியில் அணில், எலி செத்து மிதக்கிறது. அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்படுகிறோம்.எனவே சேதமடைந்துள்ள டிரான்ஸ்பார்மர், மேல்நிலைத்தொட்டியை அகற்றி புதிதாக அமைத்து தர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago