மேலும் செய்திகள்
பரமக்குடி அரசு ஐ.டி.ஐ., பட்டமளிப்பு விழா
2 minutes ago
இன்றைய நிகழ்ச்சி (05.10.2025)
3 minutes ago
புரட்டாசி பொங்கல் விழா கொண்டாட்டம்
3 minutes ago
சாயல்குடி போஸ்ட் ஆபீஸில் அலுவலர்கள் பற்றாக்குறை
4 hour(s) ago
முதுகுளத்துார் : முதுகுளத்துார் பேரூராட்சி 12வது வார்டு முக்கந்தர் சந்தில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சி 12வது வார்டு முக்கந்தர் சந்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு முதுகுளத்துார் துணை மின் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட மின்கம்பத்தின் வழியாக மின்சப்ளை செய்யப்படுகிறது. குடியிருப்பு அருகே உள்ள மின் கம்பத்தின்அடிப்பகுதி முழுவதும்சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. அவ்வப்போது மக்கள் செலவு செய்து பராமரிப்பு பணி செய்து வந்தனர். தற்போது முழுவதும் சேதமடைந்துள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர். குழந்தைகளும் வெளியில் விளையாடுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
2 minutes ago
3 minutes ago
3 minutes ago
4 hour(s) ago