உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்ததால் விபத்து அபாயம்

பாம்பன் பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்ததால் விபத்து அபாயம்

ராமேஸ்வரம்:-ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் இரும்பு பிளேட் சேதமடைந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.பாம்பன் கடலில் 1988ல் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணி செய்வது வழக்கம். அதன்படி 2022ல் பாலத்தின் தடுப்புச் சுவர், துாண்கள், மின்விளக்கு துாண்களுக்கு வர்ணம் பூசப்பட்டது.இந்நிலையில் பாலம் நடுவில் உள்ள பிங்கர் ஜாயின்ட் எனும் இரும்பு பிளேட் சேதமடைந்து இதனுள் உள்ள இரும்பு போல்ட் 3 இன்ஞ் அளவில் வெளியில் நீண்டுள்ளது.இதனால் பாலத்தில் செல்லும் வாகன டயர்கள் வெடித்து பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த இரும்பு பிளேட் 6 மாதம் ஒரு முறை சேதமடைந்து போல்ட்டுகள் வெளியில் நீண்டு விடுவதால் பல வாகனங்களின் டயர்கள் சேதமடைகிறது. எனவே பாதுகாப்பான பயணத்திற்காக இதனை அகற்றி துவக்கத்தில் பாலத்தில் இருந்த காப்பர் இரும்பு பிளேட்டை பொருத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை