உத்தரகோசமங்கையில் இருள்
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், யாத்ரீகர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.கோயில் ராஜகோபுரத்தில் இருந்து 70 அடி துாரத்தில் உயர் கோபுர ஹைமாஸ் விளக்கு பொருத்தப்பட்டுள்ளது. இரவு 8:00 மணிக்கு மேல் இந்த உயர் கோபுர மின்விளக்கை அணைக்கும் போக்கு தொடர்கிறது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையடைகின்றனர். உத்தரகோசமங்கைக்கு வந்திருந்த வெளியூர் பக்தர்கள் கூறியதாவது:உத்தரகோசமங்கை ராஜகோபுரம் முன்புறம்வாகனம் நிறுத்துமிடம்அருகே ஹைமாஸ் விளக்கு அமைந்துள்ளது. மாலை 6:00 மணிக்கு மின் விளக்கை ஆன் செய்து இரவு முழுவதும் எரிய வேண்டும். மறுநாள் காலை 6:00 மணிக்கு ஆப் செய்ய வேண்டும்.ஆனால் அதற்கு மாறாக இரவு 8:00 மணிக்கு மேல் ஆப் செய்வதால் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்கிறது. இதனால் அலைபேசி வெளிச்சத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆடம்பரத்திற்கு செலவு செய்யும் நிலையில் அத்தியாவசிய உயர் கோபுரம் மின் விளக்கை அணைத்து விட்டுசெல்வது நியாயம் அல்ல.எனவே உத்தரகோசமங்கை ஊராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றனர்.