உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமிஸ் தளத்தில் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய காலக்கெடு

எமிஸ் தளத்தில் மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய காலக்கெடு

ராமநாதபுரம்:-மாணவர்களின் பெற்றோர் மொபைல் போன் எண்களை 'எமிஸ்' தளத்தில் மே25க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை காலக்கெடு நிர்ணயம் செய்துள்ளது. விடுமுறை காலம் என்பதால் பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஓ.டி.பி., எண்ணை பெற ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றில், 1.16 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களின் பெற்றோர் மொபைல் போன் எண்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது ஓ.டி.பி., எண்ணை சரிபார்க்க வேண்டும். இதனை 10 நாட்களுக்குள் மே 25க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்போது 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கப்பட்டு எமிஸ் தளத்தில் பொதுப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்களை இப்போது தொடர்பு கொள்ள இயலாது.பல கிராமப்புற பெற்றோர்களிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லை, சில பெற்றோர்களிடம் போனே இல்லாத நிலை உள்ளது. பெற்றோர்களிடம் மொபைல் போனில் பேசி ஓ.டி.பி., எண்ணை கேட்டால் எங்களை ஏமாற்றப் பார்க்கிறீர்களா நாங்கள் தர முடியாது என்கின்றனர்.இது போன்று நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. பள்ளி திறந்த பின்பு இந்த பணியை செய்ய சொன்னால் மாணவர்களை வைத்து எளிதில் இந்தப்பணியை செய்ய முடியும். பள்ளிக்கல்வித்துறை நெருக்கடியால் தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை