உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் ராவணன் வதம்

ராமேஸ்வரத்தில் ராவணன் வதம்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி ராவணன் வதம் நடந்தது.இக்கோயிலில் தல வரலாற்றை நினைவு கூறும் விதம் ஒவ்வொரு ஆண்டும் ராமலிங்க பிரதிஷ்டை விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று மாலை கோயிலில் இருந்து பல்லக்கில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் புறப்பாடாகி திட்டக்குடியில் எழுந்தருளினர்.பின் அங்கிருந்த ராவணனை அம்பு எய்து ராமர் வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் நடத்தினார். ஸ்ரீராமருக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.திண்டுக்கல், ஜூன் 15 -திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் கொத்தையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்லத்துரை 29.இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். 2022ல் அதே பகுதியை சேர்ந்த உறவினர் வீட்டிற்கு சென்ற போது 15 வயது சிறுமி ஒருவர் தனியாக இருந்தார். வலுக்கட்டாயமாக சிறுமிக்கு செல்லத்துரை பாலியல் தொல்லை கொடுத்தார்.கள்ளி மந்தையம் போலீசார் போக்சோ சட்டத்தில் செல்லத்துரையை கைது செய்தனர். இவ்வழக்கு சிறப்பு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி வேல்முருகன், குற்றம்சாட்டப்பட்ட செல்லத்துரைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.திருநெல்வேலி, ஜூன் 15 --திருநெல்வேலி குலவணிகர்புரத்தைச் சேர்ந்தவர் அரசம்மாள் 59. ஜூன் 10 தாழையூத்தில் டூவீலரில் இருந்து கீழே விழுந்ததில் காயமுற்று மூளைச்சாவு அடைந்தார்.அவரது குடும்பத்தினர் அனுமதியுடன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலில் இருந்து கல்லீரல், தோல், கருவிழிகள் தானமாக பெறப்பட்டன. உடனடியாக அவை வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவரது உடலுக்கு மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் தலைமையில் மருத்துவர்கள் பணியாளர்கள் மரியாதை செய்தனர். மாற்றுத்திறனாளி பெண் ஒருவரிடம் இருந்து முதல்முறையாக உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை