உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கோரிக்கை

பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு கோரிக்கை

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை விடுத்தனர்.முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளங்குளத்துார், கீழக்கன்னிசேரி, சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்குள்ள உயர்நிலைப்பள்ளி கட்டடத்தில் கோடை விடுமுறையின் போது பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டுள்ளது.தற்போது வரை சுற்றுச்சுவர் கட்டப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. இதனால் கால்நடைகள் உள்ளே வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். பள்ளி முன்பு மழைநீர் செல்வதற்காக கால்வாய் உள்ளது.ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி கூறுகையில், விளங்குளத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி முன்பு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி