| ADDED : ஜூலை 27, 2024 05:40 AM
ராமநாதபுரம், : - ராமநாதபுரத்தில் இயங்கி வந்த அரசு போக்குவரத்துக்கழக தகுதி சான்றுப் பிரிவு மூடப்பட்டதை கண்டித்து ராமநாதபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார், ராமநாதபுரம் நகர், புறநகர் கிளை ஆகிய 6 பணிமனைகள் உள்ள நிலையில் இங்கிருந்த தகுதிச் சான்று பிரிவை மூடிவிட்டு இதை விட குறைவான கிளைகளை கொண்ட தேவகோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. தேவகோட்டைக்கு 110 கி.மீ., பஸ்களை கொண்டு சென்று மீண்டும் ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதி சான்று பெறுவது தேவையற்ற அலைக்கழிப்பு. செலவும் அதிகரிக்கும். ராமநாதபுரம் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டிய நிலையில் தகுதிச் சான்றுப் பிரிவு மூடப்பட்டால் மண்டலமாக அறிவிக்கப்படாத நிலை ஏற்படும்.இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தினர் தகுதிச்சான்று பிரிவு அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை வகித்தார். அரசு போக்குவரத்துக்கழக மத்திய சங்க தலைவர் ராஜன், பொதுசெயலாளர் தெய்வீரபாண்டியன், மத்திய சங்க நிர்வாகிகள் வி.பாஸ்கரன், எம்.பாஸ்கரன், கேசவன், மணிமாறன், துரைப்பாண்டியன், ராமநாதபுரம் புறநகர் கிளைத்தலைவர் போஸ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். தகுதிச் சான்று பிரிவை மூடுவதற்கு முறையாக தொழிலாளர் நலத்துறை, கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். இதனை பெறாமல் நிர்வாகம் தகுதிச் சான்று பிரிவை மூடியதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். -----------