உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆதரவற்ற பெண்கள் அரசின் உதவிபெற பதிவு செய்யுங்க

ஆதரவற்ற பெண்கள் அரசின் உதவிபெற பதிவு செய்யுங்க

ராமநாதபுரம் ; மாவட்டத்தில் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற மகளிர், கைம்பெண்கள் ஆகியோர் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற செப்.30க்குள் www.tnwidowwelfareboard.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிய வேண்டும்.சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைமைத்துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் (ம) ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு மாவட்டத்திலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள், மற்றும் பேரிளம்பெண்கள் போன்ற நபர்களிடமிருந்து, மையம் வழியாக விண்ணப்பம் பதிவு செய்ய (www.tnwidowwelfareboard.tn.gov.in) என்ற இணையதளம் துவங்கப்பட்டுள்ளது.எனவே தகுதியான மகளிர் தங்களது வருமான சான்று, இருப்பிடச்சான்று, ரேஷன்கார்டு, சுயஅறிவிப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை அருகிலுள்ள இ--சேவை மையங்களுக்கு எடுத்துச்சென்று மேற்க்காணும் இணையத்தளம் அல்லது தங்களது அலைபேசி மூலம் பதிவு செய்யுமாறும், மேலும் இவ்வாறு பதிவு செய்தவர்கள் உரிய ஆவண நகலுடன் எதிர்வரும் செப்.,30க்குள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி