ராமேஸ்வரத்தில் புனித கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம்
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வீதியில் பக்தர்கள் புனித கங்கை நீரை ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர்.நேற்று மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள பஜ்ரங்கதாஸ் பாபா சேவா டிரஸ்ட் இயக்குநர் சீதாராம் தாஸ் பாபா தலைமையில் பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, வி.எச்.பி., நகர் தலைவர் சரவணன் உட்பட ஏராளமான வட மாநில பக்தர்கள் புனித கலசத்தில் கங்கை நீரை ஊர்வலமாக எடுத்து வந்து கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தனர்.பின் புனித கங்கை நீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்ததால் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.