உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / போலீசார் விரட்டியதால் ரவுடி இறந்தாரா உடலுடன் உறவினர்கள் மறியல்

போலீசார் விரட்டியதால் ரவுடி இறந்தாரா உடலுடன் உறவினர்கள் மறியல்

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே துத்திவலைசையை சேர்ந்தரவுடி பாலகுமார் 26, மர்மமான முறையில் இறந்தார். போலீசார் விரட்டியதால் அவர் பலியானதாகக் கூறி உறவினர்கள் ரவுடியின் உடலுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.துத்திவலசையை சேர்ந்த மருங்கப்பன் மகன் பாலகுமார் 26. ஆட்டோ டிரைவரான இவர் மீது போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரது பெயர் போலீசாரின் ரவுடி பட்டியலிலும் உள்ளது.நேற்று ஊர் அருகே நாரையூரணி சுடுகாடு செல்லும் வழியில் இடது கண் பகுதியில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உச்சிப்புளி போலீசார் பாலகுமார் உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர்.அங்கு வந்த பாலகுமாரின் உறவினர்கள், 'நேற்று முன்தினம் துத்திவலசை அஜித், பாலகுமார் ஆகியோர் நடந்து சென்ற போது போலீசார் விரட்டியதால்தான் அவர் இறந்துள்ளார். அவரது இறப்பில் மர்மம் உள்ளது' என தெரிவித்து உடலை எடுக்க விடாமல் தகராறு செய்தனர்.ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உமாதேவி பேச்சுவார்த்தை நடத்தி உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் உச்சிப்புளி பகுதியில் உடலுடன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். சந்தீஷ் எஸ்.பி., பேச்சு நடத்திய பின் மறியலை கைவிட்டனர். ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை