உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி

விற்ற நெல்லுக்கு விவசாயிகள் கணக்கில் பணம்  வரவு வைப்பு தினமலர்  செய்தி எதிரொலி

ராமநாதபுரம், மார்ச் 8-தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானை வட்டாரத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்கப்பட்டு நிலுவையில் இருந்த நெல்லுக்கு உரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.நெல் சாகுபடியில் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டாரத்தில் தற்போது அறுவடை பணிகள் நடக்கிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் கொண்டு வருவது அதிகரித்துள்ள நிலையில் அவர்களுக்குரிய பணம் வங்கி கணக்கில் வரவு வைக்க காலதாமதம் செய்தனர். 20 நாட்களாகியும் பணம் வழங்காதது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று முன்தினம்(மார்ச் 6) செய்தி வெளியானது. இதுகுறித்து திருவாடானை விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறுகையில், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து 20 நாட்களாக அலைந்த விவசாயிகளுக்கு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவெற்றியூர் நெல்கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளுக்கு பணம் வந்து விட்டது. மாவட்ட அதிகாரிகள் மற்றும் தினமலர் நாளிதழுக்கு நன்றி என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !