உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உங்க சொந்த வாகனங்களை இப்படி விடுவீர்களாஅதிகாரிகளே மனசு வைங்க..

உங்க சொந்த வாகனங்களை இப்படி விடுவீர்களாஅதிகாரிகளே மனசு வைங்க..

ராமநாதபுரம், : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழுதாகி பயன்பாடில்லாத மற்றும் காலாவதியான அரசு வாகனங்கள் மழை, வெயிலில் மக்கி வீணாகிறது. இதுவே அதிகாரிகளின் சொந்த வாகனமாக இருந்தால் இப்படி கிடக்குமா என மக்கள் கேள்வி எழுப்பினர். ஆகையால் பழயை வாகனங்களை அகற்றி ஏலம் விட வேண்டும். மேலும் பயன்படுத்தும் வகையில் உள்ள வாகனங்களை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பழைய, புதிய கலெக்டர்அலுவலகங்களில்முதன்மை கல்வி அலுவலகம், வேளாண் துறை, ஊரக வளர்ச்சி துறை, கருவூலம்,சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை(கட்டுமானம்)உட்பட பல்வேறு அரசு சார்ந்த அலுவலகங்கள் செயல்படுகிறது.இந்த அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள்அலுவல் பணிக்கு அரசு வழங்கியுள்ள நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இவற்றில் பத்தாண்டுகளுக்கு முன்புஅதிகாரிகள் ஜீப்பைபயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இவர்களுக்கு அரசு சார்பில்புதிதாக கார்கள் வழங்கப்பட்டன.இதனால் பழையவாகனங்களை சில அதிகாரிகள் கலெக்டர் அலுவலகவளாகத்தில் நிறுத்தினர். இந்த வாகனங்கள் தற்போது வரை அகற்றப்படாமல்வெயிலிலும், மழையிலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில்உள்ள முட்புதர்களில் மக்கி வீணாகி வருகிறது.இதே போல ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்களை கண்டறிந்து அவற்றை ஏலம் விட வேண்டும். பயன்படுத்தும் நிலையில் உள்ள வாகனங்களை பழுது நீக்கி மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை