உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் கொடிக்கு மின்கம்பம் தந்த மின்வாரியம்

ராமேஸ்வரத்தில் கொடிக்கு மின்கம்பம் தந்த மின்வாரியம்

ராமேஸ்வரம்,: ராமேஸ்வரத்தில் மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் உயர் அழுத்த மின் கம்பத்தில் செடி கொடிகள் படர்ந்துள்ளதால் மின்தடை ஏற்படும் அபாயம் உள்ளது.ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் எதிரில் உயரழுத்த மின்கம்பம் உள்ளது. இதனருகே உள்ள காலி இடத்தில் இருந்து படர்ந்த கொடி மின் கம்பத்தில் உள்ள கம்பிகள் தெரியாதபடி முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதனை மின்வாரிய ஊழியர்கள் அகற்றி சரி செய்யாததால் இதில் அடிக்கடி மின்கசிவால் மின்தடை ஏற்படுகிறது.இதனால் வியாபாரிகள், மக்கள் அவதிப்படும் நிலையில் வரும் காலத்தில் மின் கம்பி அறுந்து விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அகற்றி சரி செய்ய மின்வாரிய ஊழியரிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.எனவே மக்களுக்கு விபரீதம் ஏற்படுவதற்கு முன் மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை