உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இமானுவேல் சேகரன் மணி மண்டபம் பணி: செப்.11க்குள் முடிக்க வலியுறுத்தல்

இமானுவேல் சேகரன் மணி மண்டபம் பணி: செப்.11க்குள் முடிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம் : பரமக்குடியில் இமானுவேல் சேகரன் மணி மண்டபம் கட்டும் பணியை செப்.11ல் குருபூஜை விழாவிற்குள் முடிக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தியுள்ளது.தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர். அதன் பின் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.அதில், பரமக்குடியில் அரசு சார்பில் கட்டப்படும் தியாகி இமானுவேல் சேகரன் வெண்கல சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை செப்.11ல் குருபூஜை விழாவிற்குள் கட்டி முடிக்க வேண்டும். திருவாடானை ஒன்றியம் எட்டுக்குடிக்கு ரோடு வசதி செய்துதர வேண்டும். ஓரியூரில் பல ஆண்டுகளாக குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். முதுகுளத்துார், பரமக்குடி, ராமநாதபுரத்தில் ஆதிதிராவிடர் காலனி இலவச வீட்டுமனை இடத்தை நத்தமாக மாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி