உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி இரு தரப்பு மோதலால் போலீசார் தடியடி

இமானுவேல் சேகரன் நினைவு நாள் அஞ்சலி இரு தரப்பு மோதலால் போலீசார் தடியடி

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரன் 67வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அமைச்சர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்த வந்த போது இரு தரப்பினர் மோதலால் போலீசார் தடியடி நடத்தினர்.பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு இடத்தில் குடும்பத்தினர், செல்லுார் ஊராட்சி மக்கள், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சாத்துார் ராமச்சந்திரன், மூர்த்தி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் உதயகுமார், காங்., மாநில தலைவர் செல்வபெருந்தகை, பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தே.மு.தி.க., விஜய பிரபாகரன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அ.தி.மு.க., பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள், வி.சி., த.வெ.க., உள்ளிட்ட கட்சியினர், சமூக அமைப்பினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.தென் மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அபிநவ்குமார், எஸ்.பி., சந்தீஷ் மேற்பார்வையில் 6200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பரமக்குடி, ராமநாதபுரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.வாடகை வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கிராம மக்கள் முளைப்பாரி எடுத்தும், மொட்டையடித்தும் குடும்பத்துடன் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

போலீசார் மீது காங்., குற்றச்சாட்டு

நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வந்தார். காங்., பொதுச்செயலாளர் முன்னாள் எம்.பி., விஸ்வநாதன் உடன் வந்தார்.அப்போது போலீசார் விஸ்வநாதன்மற்றும்உடன் வந்த கட்சியினரின் கார்களைதடுத்து நிறுத்தினர். இதனால் காங்கிரசார்கோபமடைந்தனர்.அஞ்சலி செலுத்திய பின் செல்வப்பெருந்தகை கூறியதாவது:தலைவர்களைதடுத்து நிறுத்திநிற்க வைப்பதுஏற்றுக்கொள்ள முடியாது.போலீசாரின்பாதுகாப்புமுறை சரியில்லை. இனிவரும் காலங்களில் சரியாக போலீசார் செயல்பட வேண்டும் என்றார்.நினைவிடத்திலிருந்து வேந்தோணி ரோடு ரயில்வே கேட் அருகே சென்ற போது தொண்டர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு ரோட்டில் அமர்ந்தனர்.இதையடுத்து செல்வப்பெருந்தகை தொண்டர்களிடம் பேசி சமாதானம் செய்து அழைத்துச் சென்றார்.

போலீசார் தடியடி

மாலை 5:15 மணிக்கு புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார்.அப்போது அவரது கட்சி நிர்வாகிகள் இமானுவேல் சேகரன் நினைவிடம் மீது ஏறி நிற்க முயன்றனர். இதற்கு பரமக்குடி தேவேந்திரர் பண்பாட்டு கழக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் சேர்களை துாக்கி வீசிக்கொண்டனர்.போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததால் நினைவிடப் பகுதியில் சில நிமிடங்கள் பதட்டம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ