உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கீழக்கரை கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

கீழக்கரை, - கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. வீ கேர் நிறுவனம் சார்பில் மனித வள மேலாளர்கள் பிரேம்குமார், மோகனா, ஸ்வேதா ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர்.முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்து பேசுகையில், கல்லுாரி என்பது கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேலை வாய்ப்பையும் வழங்கி மாணவர்களின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும். எனவே மாணவர்கள் இத்திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக புரிந்து தங்களது வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும்.தற்போது படிப்பை முடித்தவுடன் பணியில் அமர வெவ்வேறு நிறுவனங்களில் பணி ஆணைகள் பெற்றுள்ளனர். 100 சதவீதம் அனைவருக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்லுாரி செயல்பட்டு வருகிறது என்றார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லுாரியில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.42 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு அலுவலர் விக்னேஷ் குமார், பேராசிரியர்கள் மரகதம், ஐஸ்வர்யா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி