மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
4 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
4 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
4 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
4 hour(s) ago
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகைக்கடன் மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் முன்னாள் செயலாளர் சந்திரனை 70, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த சந்திரன் 1993-94ல் நம்புதாளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயலராக பணிபுரிந்தார். அப்போது நகைகளை ஆய்வு செய்த அலுவலர்கள் ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 110 மோசடி நடந்ததை கண்டுபிடித்தனர். சந்திரன், முன்னாள் தனி அலுவலர்கள் கண்ணதாசன், சேதுராஜன், வட்ட மேற்பார்வையாளர்கள் நல்லுச்சாமி, ராமநாதன், இளநிலை உதவியாளர் ராமலிங்கம் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்குபதிவு செய்தனர். சந்திரனுக்கு 2016 செப்., 2ல் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சிறை தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சந்திரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.அதை எதிர்த்து சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் நேற்று தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சந்திரன் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி மோகன்ராம் உத்தரவிட்டார். சந்திரனை போலீசார் மதுரை சிறையில் அடைத்தனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago