உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மஞ்சுவிரட்டில் மாடு முட்டி விவசாயி பலி

மஞ்சுவிரட்டில் மாடு முட்டி விவசாயி பலி

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மஞ்சு விரட்டில் மாடு முட்டி விவசாயி பலியானார்.திருவாடானை அருகே பாண்டுகுடி கோனேரியேந்தல் கிராமத்தில் மகாலிங்கம் மூர்த்தி கோயில் திருவிழா ஜூலை 30 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மதியம் 3:00 மணிக்கு மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஏராளமானோர் மஞ்சு விரட்டை வேடிக்கை பார்த்தனர். திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பாக்கியம் 55, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். சீறிப்பாய்ந்து வந்த காளை பாக்கியம் வயிற்றில் குத்தியதில் குடல் சரிந்து அதே இடத்தில் பலியானார். தொண்டி போலீசார் விசாரிக்கின்றனர். பாக்கியத்திற்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை