உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காட்டு மாடுகளால் விவசாயிகள் பாதிப்பு

காட்டு மாடுகளால் விவசாயிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில் காட்டுப்பகுதியில் உள்ள மாடுகள் இரவில் பருத்தி செடிகளை சேதப்படுத்தி வருவதால் பருத்தி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் 300 ஏக்கரில் அடர்ந்த சீமைக்கருவேல மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதிகள் உள்ளன. இந்த காட்டுப் பகுதிகளில் நரி, முயல், கீரி, மான் உள்ளிட்ட வன விலங்குகளும் பொது மக்களின் அரவணைப்பு இன்றி விடப்பட்ட மாடுகள் காட்டுப்பகுதியில் இனப் பெருக்கம் செய்து தன்னிச்சையாக அப்பகுதியில் வசிக்கின்றன.காட்டு மாடுகள் இரவு நேரங்களில் பெரிய கண்மாய் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் விளை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட மாடுகள் கூட்டம் கூட்டமாக வயல்களில் புகுவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் மாடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ