உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணி, கண்மாயில் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ஊருணி, கண்மாயில் மண் எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள (நீர்நிலைகள்) கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் விவசாயப் பணி மற்றும் மண்பாண்ட தயாரிப்பு பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுத்துக்கொள்ள இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சிதுறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் விவசாயப் பணி மண்பாண்ட தொழிலுக்கு தேவையான வண்டல், களிமண் எடுப்பதற்கு தகுதியான 1128 கண்மாய்கள், ஊருணிகளுக்கான விபரப் பட்டியல் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர்களிடமிருந்து பெறப்பட்டு மாவட்ட அரசிதழில் சிறப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.தங்கள் தாலுகாவிற்குட்பட்ட கண்மாய், ஊருணிகளுக்கான விபரங்களுடன் இ-சேவை மையத்தில் www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை